இயக்குநர் விஜய் இயக்கும் “வாட்ச்மேன்”படத்திற்கு பாராட்டுகளை தெரிவித்திருக்கும் இயக்குநர் பாண்டிராஜ்.

WhatsApp Image 2019-01-13 at 5.50.34 PM (9) DV-4991ஆழ்மனதில் இருந்து வரும் அளவற்ற வாழ்த்துக்கள் நடைமுறைக்கு அப்பால்,  தனித்துவத்துடன் காணப்படும். குறிப்பாக குடும்பத்தினரின் உணர்ச்சிகள் மற்றும் உறவுகளை அலங்கரிக்கும் வகையில் திரைப்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் பாண்டிராஜிடமிருந்து இத்தகைய பாராட்டினை பெற்றுள்ளார்,  “வாட்ச்மேன்” திரைப்பட இயக்குநர் விஜய். இவரின் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க அவருடன்  யோகிபாபு மற்றும் கோல்டன் ரெட்ரீவர் வகையை சேர்ந்த நாய் ஒன்றும் நடித்து உள்ளது.  “வாட்ச்மேன்” திரைப் படத்தி னை பார்த்த பாண்டிராஜ் தனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும்  தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் பாண்டிராஜ் கூறுகையில், “இயக்குநர் விஜய்யின் ‘வாட்ச்மேன்’ திரைப்படம், த்ரில்லர் மற்றும் நகைச்சுவையின் கலவையாக இருந்தது. ஒவ்வொரு காட்சியும்  அனுபவித்து பார்த்தேன்.  திரைகதை மிகவும் சுவாரஸ்யமாகவும், எதிர்பாராத ஆச்சரியமான திருப்பங்களும் நிரைந்திருந்தது. ஜி. வி. பிரகாஷ் மற்றும் யோகிபாபு திறம்பட நடித்துள்ளனர்,  குறிப்பாக  நாய்களின் நடவடிக்கைகள் வரும் காட்சிகள் விரும்பி பார்த்தேன்.  தொழில்நுட்ப குழு சிறப்பாக பணிப்புரிந்துள்ளனர்,  மேலும் எடிட்டிங், ஒளிப்பதிவு மற்றும் ரீ-ரெகார்டிங் அனைத்தும் திரைப்படத்தை மெருகேற்றியுள்ளது” என கூறினார்.

இதுகுறித்து இயக்குநர் விஜய் கூறுகையில்,  “பாண்டிராஜ் சார் போன்ற திரைப்பட தயாரிப்பாளரிடமிருந்து, இது போன்ற பாராட்டுகளைப் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ‘வாட்ச்மேன்’ திரைப்படத்திற்கு கிடைத்த புகழாரம், திரைப்படத்திற்கு மற்றுமொரு வலிமை. இயக்குநர் பாண்டிராஜ் அவர்கள் குடும்ப பார்வையாளர்களை தனது தொடர்ச்சியான படங்களின் மூலம் ஈர்த்தவர்.  அத்தகைய இயக்குநரிடமிருந்து பாராட்டுகளை பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது ‘வாட்ச்மேன்’ குழுவினராகிய ஜி. வி.  பிரகாஷ், யோகிபாபு,  மேலும் அனைத்து தொழில்நுட்பத் துறையினரும் சிறப்பான பணி செய்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளனர்.

“வாட்ச்மேன்” திரைப்படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷ்ன், அருண் மொழி மாணிக்கம் தயாரிக்கிறார்.  ஜி. வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து ள்ளார்.  காட்சிகளால் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் நிரவ் சர்மா மற்றும் சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ளனர். பாடல் வரிகளை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். இப்படத்திற்கு ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார், கலை இயக்குநர் ராஜேஷ் இப்படத்திற்கு  பின்னணி அமைத்து ள்ளார்.  மனோகர் வர்மா சண்டை காட்சிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

ஜி. வி. பிரகாஷ், சுமன், ராஜ் அருண் ஆகியோர் சேர்ந்து நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 12,2019 அன்று உலகளவில் வெளியிட திரைப்பட குழுவினரால் திட்டமிடபட்டுள்ளது.

 

Share this post:

Related Posts

Comments are closed.