”சிறுத்தை” சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படம் ’விஸ்வாசம்’.

201811301317200060_No-double-action-for-Ajith-Kumar-in-Viswasam_SECVPF 201811301317200060_1_Viswasam-Ajith2._L_styvpf”சிறுத்தை” சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படம் ’விஸ்வாசம்’. அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வந்தது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இரண்டு அஜித் இருந்ததால் இந்த தகவல் பரவியது. ஆனால் விஸ்வாசம் படத்தில் ஒரு அஜித் தான் என்று இயக்குனர் சிவா கூறி இருக்கிறார். படத்தின் கதை பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் ‘தேனி மாவட்டத்தில் கொடுவிலார்பட்டி என்கிறகிராமத்தில் நடக்கும் கதை இது. வெளியே வீரமாகவும், உள்ளுக்குள்ளே வெள்ளந்தியாகவும் வாழும் மனிதர்களின் உணர்வு பூர்வமான சம்பவங்கள்தான் `விஸ்வாசம்’. படத்தில் அஜித்துக்கு ஒரே ஒரு வேடம்தான்.

முரட்டு மீசையோடு அலப்பறையான தடாலடி ஆசாமி ‘தூக்குதுரை’ அஜித். முதல்பாதியில் தேனி கிராமத்துத் திருவிழாக் கொண்டாட்டத்தில் அதிரடி செய்கிறார். இடைவேளைக்குப் பிறகு நகரத்தில் தூள் கிளப்புறார். இதில் அஜித் முதல்முறையாக மதுரை தமிழில் பேசி அசத்தியிருக்கார். அஜித்துக்கு சந்திரன்னு ஒருத்தர் மதுரை தமிழ் சொல்லிக் கொடுத்தார். ஒரு கிராமத்து ஆள் எப்படி இருப்பாரோ அதே உடல்மொழி, பேசுற விதம், துறுதுறுப்பு, துள்ளல்னு பக்காவா தன்னைத் தயார் படுத்திக்கிட்டுப் பண்ணியிருக்கார்’ என்று கூறி இருக்கிறார்.

 

Share this post:

Related Posts

Comments are closed.