உலகளவில் அதிக வரி விதிப்பு கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று’ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சனம்!

201904041856468910_India-is-one-of-the-highest-taxing-nations-in-the-world_SECVPFஅமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இடையே 25-ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய கடந்த ஆண்டு உடன்பாடு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் ‘வரிவிதிப்பு ராஜா’ (இந்தியா) அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
வரிவிதிப்பு ராஜா என இந்தியாவை அழைத்ததற்கான காரணம் என்ன? என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு மிக மிக அதிகமாக இந்தியா வரி விதிக்கி ற து . இது அமெரிக்காவுக்கு தடையாக உள்ளது அதனால் தான் இந்தியாவை வரிவிதிப்பு ராஜா என அழைத்தேன் என்றார்.

Share this post:

Related Posts

Comments are closed.