பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த இளையராஜா – யேசுதாஸ்!

201904171627026282_1_yesu-2._L_styvpf201904171627026282_Ilayaraja-Yesudas-joins-after-9-years_SECVPFவிஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் படம், ’தமிழரசன்’. `தாஸ்’ படத்தை இயக்கிய பாபு யோகேஷ்வரன் இப்படத்தை இயக்குகிறார். விஜய் ஆண்டனியின் நீண்ட நாள் கனவான இளையராஜா இசையமைப்பில் நடிப்பது இப்படம் மூலம் நிறைவேறியது.

இளையராஜா ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக ராஜா இசையில் கே.ஜே.யேசுதாஸ் பாடியுள்ளார். “பொறுத்தது போதும் பொங்கிட வேணும் புயலென வா“ என்ற புரட்சிகரமான பாடலை யேசுதாஸ் பாட இளையராஜா இசையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. `நந்தலாலா’ படத்துக்கு பிறகு 9 ஆண்டுகள் கழித்து இளையராஜா இசையில் இவர் பாடுவது குறிப்பிடத்தக்கது.`கத்தி’ படத்தில் யேசுதாஸ் பாடிய `யார் பெற்ற மகனோ’ பாடலுக்குப் பிறகு இப்பாடல் பேசும்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

‘தமிழரசன்’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ்கோபி ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர்,  ஸ்ரீலேகா,  ஸ்ரீஜா,  கே.ஆர். செல்வ ராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன் ,   முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.. படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடை பெற்றது…இரண்டு கட்டமாக நடைபெற்ற படப்பிடிப்பு முடிவடைந்தது…அதிரடி ஆக்‌ஷன் படமாக ‘தமிழரசன்’ உருவாகி வருகிறது… .

ஒளிப்பதிவு –  ஆர்.டி.ராஜசேகர்

இசை  –   இளையராஜா

பாடல்கள்  –  பழனிபாரதி, ஜெய்ராம்

கலை  –   மிலன்

ஸ்டண்ட்  –   அனல் அரசு

எடிட்டிங்   –   புவன் சந்திரசேகர்

நடனம்   –      பிருந்தா சதீஷ்

தயாரிப்பு மேற்பார்வை   –     ராஜா ஸ்ரீதர்

கதை திரைக்கதை வசனம் இயக்கம்  –   பாபு யோகேஸ்வரன்

தயாரிப்பு  –    கெளசல்யா ராணி

 

Share this post:

Related Posts

Comments are closed.