இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் ரோபோ ஷங்கர் மகள்..!

TJNPongal1 201901131128232523_1_thalapathy-7._L_styvpf 201901131128232523_2_thalapathy-6._L_styvpf f45487d054c14d36214eb02d0085a08a IMG-20190113-WA0003 (1)தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் (TMJA) சார்பில் சென்னையில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.  பிரியா அட்லி விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இயக்குனர் அட்லி, நடிகர் ரோபோ ஷங்கர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் திரைத்துறையில் பல ஆண்டுகளாக கடை நிலை ஊழியர்களாக பணியாற்றி வரும் நலிந்த ஊழியர்களுக்கு உதவித் தொகையும் பொங்கல் பரிசு பைகளையும் சிறப்பு விருந்தினர்கள் இயக்குனர் அட்லி, பிரியா அட்லி, நடிகர் ரோபோ ஷங்கர் ஆகியோர் வழங்கி கவுரவப் படுத்தினர்.

பொங்கல் விழாவில் இயக்குனர் அட்லி பேசியது: பத்திரிகையாளர்கள் இணைந்து இப்படி ஒரு விழாவை நடத்துவது ரொம்ப மகிழ்ச்சியை தருகிறது. குறிப்பாக சொல்வதென்றால் இந்த விழாவில் சினிமாவில் கடை நிலை ஊழியர்களை அழைத்து கவுரவம் செய்வது மிக சிறப்பு. அந்த நிகழ்வில் என்னை அழைத்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியை தருகிறது.  காரணம் என் ஷூட்டிங்கில் நான் அதிகம் கவனிப்பது இது போன்ற கடை நிலை ஊழியர்களைத் தான். அவர்களை அதிகம் விசாரிப்பேன்.  இந்த பொங்கல் விழாவை பார்க்கும் போது எங்கள் ஊரிலும் ஒவ்வொரு பொங்கலுக்கும் வரச்சொல்லி அழைத்து கொண்டிருப்பது நினைவுக்கு வருகிறது.

இது ஒரு குடும்ப விழா என்பதால் எப்போதும் பத்திரிகையாளர்கள் என்னை இயக்குனர் ஆக பார்க்க வேண்டாம். நான் எப்போதும் உங்கள் சகோதரன் தான். நீங்கள் எப்போது அழைத்தாலும் உங்கள் நிகழ்வுகளில் நான் இருப்பேன். இங்கே பேசும் போது பிரபல இயக்குனர் என்றே குறிப்பிட்டார்கள் அதற்கெல்லாம் பத்திரிகையாளர்கள் ஆகிய நீங்கள் தந்த ஆதரவு தான் காரணம். இவ்வாறு இயக்குனர் அட்லி பேசினார்.

நடிகர் ரோபோ ஷங்கர் பேசும்போது: பத்திரிகையாளர்கள் ஒன்றாக இணைந்து இது போன்ற விழாவை நடத்துவது ரொம்ப சிறப்பு.
இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திரைத்துறையில் கடை நிலை ஊழியர்களாக பல ஆண்டுகள் பணியாற்றி வருபவர்களை அழைத்து கவுரவம் செய்திருப்பது. நாங்க ஷூட்டிங் 9 மணிக்கு என்றால் ஸ்பாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் போய் மேக்கப் போட்டு ரெடியானா போதும். ஆனால் புரொடக்‌ஷன்ல இருப்பவர்கள் அதிகாலையிலயே ஸ்பாட்டுக்கு வந்து வேலைய ஆரம்பிச்சிடனும். ஏன்னா நடிக்கிறவங்க வந்ததும் காபி இருக்கான்னு கேட்ட அது ரெடியா இருக்கும்.

அதே மாதிரி ஷூட்டிங் ராத்திரி எத்தனை மணிக்கு முடிஞ்சாலும் எல்லாத்தையும் சுத்தம் பண்ணி கொண்டு போய் சேக்க நடு ராத்திரி ஆகிடும். மறு நாள் அதிகாலை மறுபடியும் ஷூட்டிங் ஸ்பாட் வரணும். இடைப்பட்ட சில மணி நேரம் தான் அவங்க தூங்கும் நேரம். அதே போல ஸ்டண்ட் நபர்களும் ரொம்ப ரிஸ்க் வேலை செய்றவங்க. ஒரு காட்சிய எடுக்கும் முன்பு இது போன்ற ஸ்டண்ட் கலைஞர்கள் தான் பலமுறை செய்து காட்டுவார்கள். இது போல உள்ளவர்களை அழைத்து கவுரவித்த தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்துக்கு நன்றி.

இந்த நல்ல விழாவில் ஒரு நல்ல தகவல் இயக்குனர் அட்லி அவர்கள் அனுமதியோடு சொல்றேன். என் மனைவியும், மகளும் ஒவ்வொரு நாள் ராத்திரியும் டிக் டாக் வீடியோ போடுறோம்னு தினமும் என்னை டார்ச்சர் பண்ணாங்க. அப்படி அவங்க செய்த பல வீடியோக்கள் யார் மூலமாகவோ இயக்குனர் அட்லி பார்வைக்கு போயிருக்கு. தளபதி விஜய் படத்தில் நடிக்கப் போறவங்க தேர்வு நடந்து வருது. அதுல என் மகளின் வீடியோவை பார்த்ததால் விஜய் சார் படத்தில் நடிக்கும் வாய்ப்புக்கு தேர்வாகி இருக்கிறார். முன்னாடியே பல வாய்ப்புகள் வந்த போது படிப்பு முக்கியம் என்று தவிர்த்தேன்.

ஆனால் அட்லி – விஜய் கூட்டணியில் நடிக்க வாய்ப்பு வந்தால் விட முடியுமா. அதனால எப்ப தேதி கேப்பார்னு காத்திருக்கிறேன்.
அதே போல இன்னொரு சர்ப்ரைஸ் விஷயமும் இருக்கு. அத இயக்குனர் அட்லியே சொல்லுவார். தளபதி என்னை பாக்கும் போதெல்லாம் நாம சேந்து பன்னுவோம்னு சொல்லுவார். அதே போல தான் இயக்குனர் அட்லியும். இவ்வாறு ரோபோ ஷங்கர் பேசினார்.

சிறப்பு விருந்தினர்களுக்கு சங்க தலைவர் கவிதா நினைவு பரிசு வழங்கினார். சங்க செயலாளர் கோடங்கி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க, முடிவில் சங்க செயற்குழு உறுப்பினர் சஞ்சய் நன்றி கூறினார்.

Share this post:

Related Posts

Comments are closed.