‘மாணவி அனிதா தற்கொலை எனக்கு வேதனை அளிக்கிறது’ ரஜினி!

26-1461657070-kabali788மருத்துவ படிப்பில் சேர சீட் கிடைக்காததால் மனமுடைந்த அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது வேதனை அளிக்கிறது என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் மனமுடைந்து இன்று தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பல அமைப்பினர் போராட்டமும், அரசியல் வாதிகள் பல கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல் ஹாசன் மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மாணவி அனிதாவின் தற்கொலை எனக்கு வேதனை அளிக்கிறது என்று டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Share this post:

Related Posts

Comments are closed.