‘காலா’ பட விவகாரத்தில் கர்நாடக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை’ குமாரசாமி கருத்து!

201805281932256141_Kaala-new-Trailer-Released_SECVPF 201806011234133493_karnataka-CM-kumaraswami-comments-on-kaala-issue-in_SECVPFநடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு பல்வேறு தரப்பில் ஆதரவும் எதிர்ப்பும் வந்த வண்ணம் உள்ளது. தமிழக அரசியலில் ரஜினி தம்மை நிலைப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், கர்நாடகாவில் ’காலா’ திரைப்படத்தை வெளியிட விடமாட்டோம் என சமீபத்தில் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து, கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையும் ’காலா’ திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என முடிவு செய்து அறிவித்தது.

இச்சம்பவம் தொடர்பாக பேசிய ரஜினி, கர்நாடகத்தில் திரைப்படத்தை வெளியிடும் விவகாரத்தை தென்னிந்திய வர்த்தகசபை பார்த்துக்கொள்ளும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் முதல்வர் குமாரசாமிக்கு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், ரஜினியின் ’காலா’ திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, ’காலா’ திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவது குறித்து அரசு முடிவு எடுக்கவில்லை எனவும், மக்கள் வேண்டாம் என முடிவு செய்துவிட்டால் யாரும் ஒன்றும் செய்யமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Share this post:

Related Posts

Comments are closed.