கிருஷ்ணா-கருணாகரன் மற்றும் ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ள படம் ‘வீரா’

IMG_9264 IMG_1875இந்த செப்டம்பர் மாதத்தில் ரிலீஸாவதிற்கு ஓரிரு படங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், இப்போட்டியில் ‘வீரா’ படமும் களமிறங்கியுள்ளது மேலும் சுவாரஸ்யத்தையும் பரபரப்பையும் கூட்டியுள்ளது. கிருஷ்ணா கருணாகரன் மற்றும் ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ள இப்படத்தில் தம்பி ராமையா,மொட்ட ராஜேந்திரன்,யோகி பாபு,ராதாரவி மற்றும் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 இப்படத்தை, பல வெற்றி படங்களை தயாரித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ள  ‘R S இன்போடைன்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ளது. ராஜா ராமன் இயக்கியுள்ள இந்த ஆக்ஷன்-காமெடி படம் ரசிகர்களை மிகவும் கவரும், என ரிலீஸ் உற்சாகத்தில் இருக்கும்  இப்படக்குழு உறுதியாக கூறுகின்றனர் . வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பிண்ணனி இசையை  s.n பிரசாத் அமைத்துள்ளார் இப்படத்தில்  பாக்கியம் ஷங்கர் எழுத்து பணியாற்றியுள்ளார். சலீம்’, ‘ஜிகர்தண்டா’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ மற்றும் ‘சேதுபதி’ போன்ற வெற்றி படங்களை வெளியிட்டதின் மூலம் தங்களின் பெயரையும் திறமையையும் நிலைநாட்டிவரும் ‘ஆரஞ்சு கிரியேஷன்ஸ்’  தற்பொழுது ‘வீரா’ படத்தை ‘வன்சன் மூவிஸ்’ நிறுவனத்தோடு இணைந்து  வெளியிடவுள்ளது. இது ‘வீரா’ படத்தின் தரத்திற்கு ஒரு பெரிய சான்றாக ஆகியுள்ளது.
” ஒரு படத்தின் கதையும் அது படமாக்கப்பட்டுள்ள விதத்தையும்  தரத்தையும் வைத்துதான் நாங்கள்  அதை வாங்குவது குறித்து ஒரு முடிவுக்கு வருவோம். அந்த வகையில் ‘வீரா’, கதையம்சத்திலும், படமாக்கப்பட்டுள்ள விதத்திலும்  எங்களை மிகவும் கவர்ந்தது. இப்படத்தை வாங்கி வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் வெற்றிப்பட பட்டியலில் சேர்வதிற்கான அனைத்து அம்சங்களும் இப்படத்தில் உள்ளதாக நம்புகிறோம். ‘வீரா’ படத்தின் முழு அணியும் பெரிய முனைப்போடு  உழைத்துள்ளது . இந்த  செப்டம்பர் மாதத்தில் ‘வீரா’ படத்தை பெரிய அளவில் ரிலீஸ் செய்யவுள்ளோம். எங்களை போலவே சினிமா ரசிகர்களும் இப்படத்தை ரசித்து மகிழ்வார்கள் என நம்புகிறோம்” எனக்கூறினார் ‘ஆரஞ்சு கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் தலைவர்.
 

Share this post:

Related Posts

Comments are closed.