சத்யராஜ் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ”தீர்ப்புக்கள் விற்கப்படலாம்”

PSX_20190206_153400 PSX_20190206_124045தனிமனிதனின் வாழ்க்கையை 3 மணிநேரத்திற்குள் ஆழமாக சொல்வதே சினிமாவின் சக்தி என்று கூறலாம். இதை நன்கு அறிந்த நடிகர்கள் தங்களின் கதைகளை சமுதாயத்திலிருந்தும் , சமுதாயத்திற்காகவும் தங்களின் கதாபாத்திரங்களின் வாயிலாக வெளிப்படத்துகின்றனர். அத்தகைய நடிகர்களில், நடிகர் சத்யராஜ் தன் திரைப்பயணத்தில், அநீதிகாக போராடும் நேர்மையான காவலர் முதல் துடிப்பான இளைஞர் வரை அத்தனை கதாபாத்திரங்களிலும் நடித்து விட்டார்.

சத்யராஜ் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ”தீர்ப்புக்கள் விற்கப்படலாம்” இப்படத்தைப்பற்றி தயாரிப்பாளர் கூறுகையில் “சத்யராஜ் சாரின் உழைப்பு எங்கள் அனைவரையும் பிரமிக்கவைத்தது. தன் கலையின் மீது அவருக்கு இருக்கும் அற்பணிப்பே அவரின் ஒட்டு மொத்த உழைப்பையும் கேட்கிறது. ஒரு தயாரிப்பாளராக இருப்பதை விட, இத்திரைப் படத்தை அவருடன் பணியாற்றுவதற்கான  மிகப் பெரிய அனுபவமாகவே பார்க்கிறேன். படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது கூடுதல் மகிழ்ச்சி” என்றார் படத்தின் தயாரிப்பாளர் சாஜீவ்.

புதுமுக இயக்குனர் தீரன் கூறுகையில், “சமுதாயத்தின் மீது ஒரு தனிமனிதனுக்கு இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்திய “வெட்னஸ்டே” பட பாணியில் இருக்கும் திரைப்படமே இது.  படத்தின் தலைப்பு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் , அது கதைக்கு மிகவும் அவசியமாக இருந்தது. தற்போது படப்பிடிப்பை தொடங்கியுள்ளோம், கோடை விடுமுறை யில்( ஏப்ரல்-மே) திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.

இத்திரைப்படத்திருக்கு அஞ்சி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மான்ஸ்ட்ரோ 8k விஸ்டா விஷன் வெப்போன் 8 k ஹீலியம் கேமரா சாதனங்கள் முதல் முறையாக இந்த படத்துக்காக பயன்படுத்துவது  இதுவே முதல் முறை.  படத்தொகுப்பை கவனிக்கிறார் சரத். இவர் எடிட்டர் ரூபன் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். தினேஷ் சுப்பாராயன் சண்டை பயிற்சியை கவனிக்கிறார். ” யாமிருக்க பயமேன்” புகழ் பிரசாத் இசையமைக்க , ஹனிபீ கிரியேஷன்ஸ் சார்பில் சாஜீவ் மீரா சாஹிப் ராவுத்தர் தயாரிக்கிறார்.

 

Share this post:

Related Posts

Comments are closed.