விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘சர்கார்’ படத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட பாடல்!

sarkarjpg 201810011318555963_Sarkar-Oru-Viral-Puratchi-Viral-on-social-medias_SECVPFஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்பட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `சர்கார்’. நாளை இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.

படத்திலிருந்து `சிம்டாங்காரன்’ என்ற ஒரு பாடல் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இரண்டாவதாக ‘ஒருவிரல் புரட்சி’ என்ற பாடல் நேற்று மாலை வெளியாகியது. விவேக் எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான்  இசையமைத்துள்ளார்.

தேர்தல் அரசியலை மையப்படுத்தி வெளியாகி உள்ள இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது. ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து ஸ்ரீநிதி வெங்கடேஷ் இணைந்து இந்த பாடலை பாடி உள்ளார். இந்த பாடல் வரிகளின் மூலம் ’சர்கார்’ அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்பது உறுதியாகி இருக்கிறது. பாடல் வெளியான 17 மணிநேரத்தில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் யூடியூப்பில் பார்த்துள்ளனர்.

 

Share this post:

Related Posts

Comments are closed.