பிரபல தொலைகாட்சி நடிகர் விக்னேஷ் கார்த்திக் இயக்கும் புதிய படம்!

IMG_5974விக்னேஷ் கார்த்திக் தன்னுடைய திறமையால் ஒரு நடிகராகவும் இயக்குநராகவும் சின்னத்திரையில் திறம்பட பணிபுரிந்து பெரிய திரையிலும் தன்னை ஒரு திறமையான இயக்குநராக  வெளிகாட்ட வருகிறார். இவர் இயக்குநராக அறிமுகமான “ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல” திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.  பின்னர், “யுவர்ஸ் ஷேம்ஃபுலி 2” குறும்படம் அன்மையில் இவருக்கு  பாராட்டுகளையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி தந்தது.  திரைப்படத்துரையினர் மட்டுமல்லாமல் பலரிடமிருந்து நேர்மறையான பாராட்டுகளை பெற்று வருகிறார்.

“ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் இருந்தபோதிலும்,  இத்தகைய ஒரு வரவேற்பை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இந்த குறும்படம் ஒன்பது மில்லியன்  பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது என்பதை விட, திரைத்துறை நண்பர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் பாராட்டு பெற்றது தான் என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ள்து” என்று கூறினார் விக்னேஷ் கார்த்திக்.

இரண்டாவது திரைப்படத்தை பற்றி விக்னேஷ் கார்த்திக்கிடம் கேட்டபோது, அவர் கூறியது. “இது ஒரு அறிவியலும் கற்பனையும் நிறைந்த காதல் நகைச்சுவை படம்” என பதிலளித்தார்.  பின்னர் இவரிடம் முந்தைய திரைப்படமும் கற்பனை வகையை சார்ந்தது என வினவியபோது,  அதற்கு விக்னேஷ், “ஆமாம் ஆனால் ‘தயாரிப்பு எண் 2’ படம் முற்றிலும்  மாறுபட்ட கதையம்சத்தை கொண்ட வித்தியாசமான ஒன்று,  மேலும் இந்த படம் நிச்சயம் உலகளாவிய ரசிகர்களுக்கு ஏற்ப வேடிக்கையாகவும், பொழுதுப்போக்காகவும் இருக்கும்” என்பதோடு அவர் படப்பிடிப்பை செப்டம்பர் மாதத்தில் முடித்து விடுவார் என்றும்,  தற்போது நடிகர்கள் மற்றும் தொழில்நுடப வல்லுநர்கள் தேர்வு செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

வால்மேட் என்டர்டெயின்மன்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் தினேஷ் கண்ணன் மற்றும் ஶ்ரீதர் தயாரிக்கும், இந்த படத்திற்கான தலைப்பு இன்னும் வைக்கப்படவில்லை, முந்தைய படத்தில் மிக வித்தியாசமாக வைத்திருந்ததால், இந்த படத்திற்கும் அப்படி தலைப்பு  வைக்க வாய்ப்பிருக்கிறதா என வினவியபோது, “ஒருசில தலைப்புகள் பரீசீளிக்கப்பட்டு வருகிறது, இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை, விரைவில் தலைப்பு வெளியிடுவோம்”

 

Share this post:

Related Posts

Comments are closed.