‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம்’ துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி..!

201902071830185833_opanneerselvam-says-sterlite-plant-will-not-open_SECVPFநெல்லை மாநகர் மாவட்ட அம்மா பேரவை துணைத்தலைவர் மனோகரன் எம்.எல்.ஏ.வின் தந்தை அய்யாச்சாமி உடல்நலக்குறைவினால் காலமானார். இதையடுத்து நேற்று மனோகரன் எம்.எல்.ஏ. வீட்டிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த அய்யாச் சாமி படத்திற்கு மாலைகள் அணிவித்து மனோகரன் எம்.எல்.ஏ.வுக்கு ஆறுதல் கூறினார்.

இதில் அமைச்சர் ராஜலெட்சுமி, மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் சவுக்கை வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் மூர்த்திப்பாண்டியன், பேரவை செயலாளர் சாமிவேல், ஒன்றிய அவைத்தலைவர் முகம்மது உசேன், வட்டார நில வங்கியின் தலைவர் கார்த்திகை செல்வன், மாவட்ட மன்றச் செயலாளர் சின்னத்துரை, பேரூர் செயலாளர்கள் குமரேசன், கந்தராஜ், பொறுப்பாளர்கள் காசிராஜன், துக்காண்டி, முருகையா, முருகன், பரமேஸ்வரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ முத்துச்செல்வி, மாநகர மாவட்ட நிர்வாகிகள் தலைவர் பரணி சங்கரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும். மக்களுக்கு எண்ணற்ற சாதனைகளை செய்து கொண்டு சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக வைகோ கூறி வருகிறார். இவை உண்மையில் பசுமை தீர்ப்பாயத்தின் படி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தமிழக அரசுதான். இதனை திறக்க விடமாட்டோம். இந்த விசயத்தில் வைகோ தான் இரட்டை வேடம் போடுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share this post:

Related Posts

Comments are closed.