எல்.சுரேஷ் இயக்கத்தில் ஜெய் – வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி. கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி இருக்கும் `நீயா 2′

201903101918331515_Jai-feels-bad-by-Raai-Lakshmi-in-Neeya-2-Press-Meet_SECVPF 201903101918331515_2_Neeya-2-Jai2._L_styvpfகமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் `நீயா’. 39 வருடங்களுக்கு பிறகு `நீயா 2′ என்ற பெயரில் புதிய படம் ஒன்று தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் 22 அடி நீளம் கொண்ட ராஜநாகம் முக்கிய அங்கம் வகிக்கிறது.

படத்தின் நாயகனாக வித்தியாசமான வேடத்தில் ஜெய் நடிக்கிறார். ஜெய் இரண்டு வித பரிமாணத்திலும், பாம்பு பெண்ணாக வரலட்சுமியும் நடித்துள்ளனர். ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா நாயகியாக நடித்திருக்கிறார்கள். பாலசரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் இயக்குநர் எல்.சுரேஷ், ஜெய், ராய்லட்சுமி, பாலசரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

பொதுவாக பட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத நடிகர் ஜெய் ’நீயா 2’ படத்திற்காக பங்கேற்றிருந்தார். அப்போது அப்படக்குழுவினரும், பத்திரிக்கையாளர்களும் இந்த விழா நிகழ்ச்சியில் ஜெய் கலந்துக் கொண்டதை கண்டு ஆச்சரியப்பட்டனர்.

அந்த விழாவில் அவர் பேசும்போது:

”தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். வேறு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் தாமதமாகிவிட்டது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்றார். முடிவில் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஜெய் மற்றும் ராய்லட்சுமி இணைந்து புகைப்படம் எடுத்தனர். அப்போது ராய்லட்சுமி போட்டிருந்து காலணியின் ஹீல்ஸ் மிக உயரமாக இருந்ததால், நாயகியுடன் சிரமப்பட்டுக் கொண்டு ஜெய் நின்றார். இப்படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

 

Share this post:

Related Posts

Comments are closed.