“நீயா2” படத்தில் ஜெய்-யை காதலிக்க லட்சுமிராய்க்கும் கேத்தரின் தெரேசாவுக்கும் போட்டி!

IMG_2411 DSC_9414சர்வாவும்  மலரும் உயிருக்குஉயிராய் காதலிக்கிறார்கள். ஆடல் பாடலுமாக சுற்றித்திரியும் மலருக்கு தலையில் இடிவிழுந்தது போல் செய்தி அறிகிறாள். தனது காதலனுக்கு வேறு ஒருவரு டன்  திருமணம் நடக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சியாயிருக்கி றாள். பழைய காதலை மறக்க முடியாமல் காதலன் சர்வாவை தேடி அலைகிறாள், பழையநினைவுகளோடு. அவன் இருக்கும் இடம் தேடி கண்டுபிடித்து அவன் ரூமிற்க்கு செல்கிறாள்.

அவன் இல்லாத அந்த ரூமையையே ஏக்கமாய் பார்த்து கொண்டு இருக்க, சர்வாவும், அவன் மனைவி திவ்யாவும் ரூமிற்குள் வர , மலர் ஒளிந்து கொள்கிறாள். இருவரும் படுக்கையில் கட்டி பிடித்து புரள… மலர் கோபமடைகிறாள். கோபமடைந்த மலர் அவர்களை என்ன செய்கிறாள் என்பதே அடுத்த காட்சியின் தொடர். இப்படி  ஒரு காட்சியில் , சர்வாவாக ஜெய், காதலி மலராக ராய்லட்சுமி, மனைவி திவ்யாவாக கேத்தரின் தெரேசா நடித்த காட்சி சாலக்குடியில் படமாக்கப்பட்டது.

இவர்கள் மூவருடன் தொடர்புடைய நான்காவது ஆளாக வரலட்சுமி நடித்திருக்கிறார். அதுவே படத்தின் சஸ்பென்ஸ் கதையாக அமைந்து இருக்கிறார்கள். விதி வலியது என்பது போல் , காலகாலமாய் காத்திருந்த வரலட்சுமியின் காதல் ஜெய்த்ததா?  அவனை எப்படியும் அடைந்தே தீருவேன் என்ற ராய்லட்சுமியின் காதல் ஜெய்த்ததா?  இவர்களுடன் போராடும் கேத்தரின் தெரசா ஜெயித்தாரா?  இதற்காக ஜெய் செய்த தியாகம் என்ன என்பதே நீயா2.  ராஜநாகம் ஒன்று முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது.  இப்படம்  மே10 வெளியீடு.

இயக்கம் :  L . சுரேஷ்       இசை  : சமீர்.  ஒளிப்பதிவு : ராஜவேல் மோகன். தயாரிப்பு    : A.ஸ்ரீதர்

 

 

Share this post:

Related Posts

Comments are closed.