தனுஷ்-சாய் பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாரி 2’ படம் டிசம்பர் 21-ஆம் தேதி வெளியீடு!

Maari2 (1) 201812041729494720_Maari-2-Confirms-Dec-21-Release_SECVPF’வடசென்னை’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘மாரி 2’ வெளியாக இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்திலும், டோவினோ தாமஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி வெளியாக இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதேநாளில்தான் விஜய் சேதுபதியின் ’சீதக்காதி’, ஜெயம் ரவியின் ’அடங்க மறு’, விஷ்ணு விஷாலின் ’சிலுக்குவார்பட்டி சிங்கம்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4 படங்களுக்கும் திரையரங்குகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாரி-2 டிசம்பர் 21-ஆம் தேதி, குறித்த தேதியில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில், சமீபத்தில் வெளியான `ரவுடி பேபி’ என்ற பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this post:

Related Posts

Comments are closed.