ஹன்சிகா மொத்வானி நடிக்கும் ‘மகா’ மர்மம் நிறைந்த திரில்லர் படம்..!

001 designonly2 (1)Magnetizing, Alluring, Hidden & Aggressive’ ஆகியவை இந்த ‘MAHA’ படத்தின் தலைப்பின் முதல் எழுத்துக்களை குறிப்பவை மட்டுமல்ல. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களில் ஹன்சிகா மொத்வானியின் அவதாரங்களை ஒத்ததாகவும் இருக்கிறது. மேலும், மொத்த படமும் அத்தகைய குணாதிசயங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஏனெனில் இது தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்க்கும் என்பதை படத்தின் தோற்றம், பிரமாண்டம், சஸ்பென்ஸ் கூறுகள் மூலம் குறிப்பிடுகின்றன. இந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பை படக்குழு  முடித்திருக்கிறது. எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் வி  மதியழகன் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

“ஆம், ஒரு தயாரிப்பாளராக மிகக் கடுமையாக பணிபுரியும் இந்த குழுவை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். ஒரு தயாரிப்பாளரை ஊக்கப்படுத்தும் முதல் விஷயம், படக்குழுவினர் சொன்ன தேதிக்குள் முடித்துக் கொடுக்கும் போது தான். இயக்குனர் ஜமீல், ஹன்சிகா மொத்வானி, ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் மற்றும் குழுவில் உள்ள அனைவரின் ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்கிறார் எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் வி மதியழகன்.

“வழக்கமாக சினிமாவில், திறமையான கலைஞர்களை இயக்குநரின் நடிகர், தயாரிப்பாளரின் இயக்குனர் என்ற அடைமொழியுடன் குறிப்பிடுவார்கள். ஆனால் நான் தொடர்ந்து பெரும் பொறுப்புடன் செயல்படும் ஒரு தயாரிப்பாளரின் குழுவைக் கொண்டிருக்கிறேன் என கருதுகிறேன். இது எனக்கு ஒரு நேர்மறையான உணர்வைத் தருகிறது. இப்போதே எனக்கு படத்தின் தரம் கண் முன்னால் தெரிகிறது” என்றார்.

தயாரிப்பாளர் மதியழகன் வெவ்வேறு நிலைகளில் உருவாகி வரும்,  நயன்தாராவின் கொலையுதிர் காலம், அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’ என நல்ல தரமான படங்களை தயாரித்து வருகிறார். ஜிப்ரான் இசை யமைக்க, ஹன்சிகா மொத்வானி நடிக்கும் ‘மகா’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்  அம்சங்களை கொண்ட ஒரு மர்மம் நிறைந்த திரில்லர் படம்.

 

Share this post:

Related Posts

Comments are closed.