“குருதி ஆட்டம்” படத்தில் அதர்வாவுடன் இணையும் ராதாரவி மற்றும் ராதிகா சரத்குமார்!

201809061251086844_Radha-Ravi-and-Raadika-Sarathkumar-joins-Atharvaas-Kuruthi_SECVPF 201809061251086844_1_Kuruthi-Attam-RadhaRavi-Radhika2._L_styvpfஅதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய `இமைக்க நொடிகள்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதர்வா நடிப்பில் அடுத்ததாக `பூமராங்’, `100′ உள்ளிட்ட படங்கள் விரைவில் ரிலீசாக இருக்கின்றன. இந்த நிலையில் அதர்வா `8 தோட்டாக்கள்’ பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் `குருதி ஆட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் நாயகி தேர்வு மும்முரமாக நடந்து வரும் நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ராதாரவி மற்றும் ராதிகா சரத்குமார் ஒப்பந்தமாகி உள்ளனர்.

இதுகுறித்து இயக்குநர் ஸ்ரீ கணேஷ் பேசியதாவது,

ராதாரவி, ராதிகா எனது இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் நடிப்பது நிச்சயமாக படத்திற்கு மிகப்பெரிய கவன ஈர்ப்பாக அமையும். இந்த கதையை எழுதியதில் இருந்தே இவர்களை தவிர வேறு யாரையும் என்னால் யோசித்து பார்க்க முடியவில்லை. முதலில் இவர்கள் என் கதையை கேட்பார்களா என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது, ஆனால் நான் கதாபாத்திரத்தை எழுதியிருந்த விதம் அவர்களை கவர்ந்தது என்பதுஎனக்கு மிகவும் ஆச்சர்யமான விஷயம். முழுமனதோடு இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்கள். இந்த படத்தின் நாயகி தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது, என்றார்.

ராக் போர்ட் என்டர்டைன்மெண்ட் சார்பில் டி.முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.மதுரைப் பின்னணியில் உள்ள கேங்க்ஸ்டர்களை பற்றிய ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாகிறது.

 

Share this post:

Related Posts

Comments are closed.