ஒரு காவலனுக்கும், சாதாரண மனிதனுக்கும் உள்ள உறவுகளைப்பற்றி சொல்லும் படம் ’காவல்துறை உங்கள் நண்பன்’

IMG-20170106-WA0001 IMG-20161226-WA0020“நமது உணர்வுகள்தான் நம் வாழ்வை வழி நடத்தும் சக்திகளாக இருக்கின்றன” என்ற ஒரு புகழ்பெற்ற பழமொழி இருக்கிறது. அது மறுக்க முடியாத உண்மை. உணர்வுகள்தான் நம் வாழ்வில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கின்றன. அதனால்தான் அத்தகைய திரைப்படங்கள் பார்வையாளர்களை எப்போதும் கவர்ந்திழுக்கின்றன. ‘மோ’ என்ற திகில் திரைப்படம் மற்றும் ‘அதிமேதாவிகள்’ என்ற காமெடி திரைப்படத்தை தொடர்ந்து இப்போது ஒரு எமோஷனல் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இயக்குனர் ஆர்டிஎம். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற தலைப்பில் ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் ஒரு சாதாரண மனிதன் இடையே உள்ள உணர்ச்சி பிணைப்பை சொல்லும் படமாக உருவாகியிருக்கிறது.

இயக்குனரின் முந்தைய படங்களான ‘மோ’ மற்றும் ‘அதிமேதாவிகள்’ படங்களின் நாயகனான சுரேஷ் ரவி இந்த படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். மைம் கோபி மற்றும் கல்லூரி வினோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஆதித்யா-சூர்யா (இசை), விஷ்ணு ஸ்ரீ (ஒளிப்பதிவு), வடிவேல்-விமல் ராஜ் (எடிட்டர்) மற்றும் ராஜேஷ் (கலை) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். ஒயிட் மூன் டாக்கிஸுடன் இணைந்து BRS டாக்கீஸ் கார்ப்பரேஷன் இந்த படத்தை தயாரிக்கிறது.

 

Share this post:

Related Posts

Comments are closed.