ஓடாத படத்திற்கெல்லாம் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள், ஆனால் இது உண்மையான வெற்றி.. ஐஸ்வர்யா ராஜேஷ்!

201901081531311353_Aishwarya-Rajesh-Speech-at-Kanaa-Success-Meet_SECVPF 201901081531311353_1_Kanaa-Aishwarya-Rajesh2._L_styvpfசிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமான படம் ‘கனா’. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு, ரமா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்து வெளியான ’கனா’ படம் பெரிய அளவில் வெற்றி அடைந்து இருக்கிறது.

இதனை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. அந்த விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் போது, “இப்போது எல்லாம் வெற்றி பெறாத படத்துக்குக் கூட வெற்றி விழா கொண்டாடுறாங்க” என்று குறிப்பிட்டார்.

படத்தின் வெற்றிச் சந்திப்பில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், ‘கிரிக்கெட் தெரியாத என்னை இந்த படத்திற்காக பயிற்சி கொடுத்து நடிக்க வைத்த இயக்குனர் அருண்ராஜாவுக்கும், என்மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கும் நன்றி. இந்த படத்தில் நடித்ததில் என் அம்மாவுக்கு பெரிய மகிழ்ச்சி. படத்தை பார்த்த பிறகு இந்த படத்துக்கு பிறகு நான் நடிக்காவிட்டாலும் கூட பரவாயில்லை என்றார். இதுதான் உண்மையான வெற்றி. நிறைய படங்கள் ஓடுதோ இல்லையோ வெற்றி விழா கொண்டாடுவார்கள். இந்த விழா அப்படி இல்லை. இது உண்மையான வெற்றி விழா’. இவ்வாறு அவர் கூறினார்.

சிவகார்த்திகேயன் பேசும்போது ‘என்னை நடிகர் என்றே கூப்பிடுங்கள். அதுதான் நிரந்தரம். அதில் இருந்து தொடங்கியதுதான் மற்றது எல்லாம். இந்த படத்தின் வெற்றி மூலம் கிடைத்த லாபம் எங்களுக்கு மட்டும் அல்ல விவசாயிகளுக்கும் சென்று சேரும். அவர்கள் வலியை பேசிய படம் அவர்கள் வாழ்க்கையையும் மாற்ற நிச்சயம் உதவும்’ என்று கூறினார்.

 

Share this post:

Related Posts

Comments are closed.