கடாரம் கொண்டான்’ படத்தில் விக்ரம் குரலில் ரசிகர்களின் உற்சாகத்தை தூண்டும் பாடல்!

201903071401018909_Chiyaan-Vikram-records-a-peppy-song-for-Kadaram-Kondan_SECVPFராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கடாரம் கொண்டான்’. படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இசையமைக்கும் பணிகளில் ஜிப்ரான் பிசியாகி இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இப்படத்தில் விக்ரமுடன் அக்‌ஷரா ஹாசன் மற்றும் நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்குகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் அனைவரையும் ஈர்த்தது.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் பாடல்களில் சியான் விக்ரம் ஒரு பாடலை பாடியுள்ளார்.

“தீச்சுடர் குனியுமா? தேடலில் உள்ள வீரனின் உள்ளம் பணியுமா? எரிவா மேலே மேலே”

என ஆரம்பிக்கும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார்.

இதுகுறித்து ஜிப்ரான் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘கடாரம் கொண்டான்’ படத்தில் விக்ரம் சாரை ஒரு பாடலை பாட வைத்ததில் பெருமை கொள்கிறேன். முழு உற்சாகத்துடன் அவர் அந்த பாடலை சிறப்பாக பாடிக் கொடுத்திருக்கிறார். காலையில் இந்த பாடலை கேட்கும் போது நாள் முழுக்க அது உற்சாகத்தை கொடுக்கும் என்றுதான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற ஏப்ரலில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share this post:

Related Posts

Comments are closed.