பாகிஸ்தான் மீது மீண்டும் ‘சர்ஜிக்கல்’ தாக்குதல் நடத்துவோம் இந்திய தளபதி எச்சரிக்கை!

201709261210136631_Surgical-strikes-a-message-to-Pakistan-more-if-necessary_SECVPFபுதுடெல்லி,
ஜெய்ஸ் – இ- முகம்மது தீவிரவாதிகள் கடந்த ஆண்டு 18-ந்தேதி நடத்தியது போன்று அதே தேதியில் இந்த ஆண்டும் தாக்குதல் நடத்த முயற்சி செய்த னர். அதையும் இந்திய ராணுவம் முறியடித்தது.
இன்று, நேற்று, நேற்று முன்தினம் மட்டும் 5 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்கள் 6  பேரும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். தீவிரவாதிகள் தொடர்ந்து இத்தகைய ஊடுருவலில் ஈடுபட்டால் மீண்டும் சர்ஜிக் கல் தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என்று இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின்ராவத் எச்சரித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடந்த விழாவில் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

எல்லையில் முகாம்கள் அமைத்துள்ள தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து உதவி செய்து வருகிறது. இதன் மூலம் எல்லைத் தாண்டும் தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது. இந்த செயலை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும்.இதை இனி தீவிரவாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தாக்குதல் நடத்த நினைத்தால், இந்திய ராணுவம் மீண்டும் சர்ஜிக்கல் நடத்த தயங்காது. சர்ஜிக்கல் தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் தாக்குதல், தீவிர வாதிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் விடப்பட்ட எச்சரிக்கையாகும். என்றாலும் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ  தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.

இதையும் மீறி இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்ப பாகிஸ்தான் முயன்றால் அவர்களை வரவேற்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது. ஒவ்வொரு தீவிரவாதியும் சுட்டு வீழ்த்தப்பட்டு 2 அடி ஆழத்தில் புதைக்கப்படுவான். ஏற்கனவே நடத்திய சர்ஜிக் கல் தாக்குதல் அவர்களுக்கு ஒரு பாடம் மாதிரி தான். அதை அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். இல்லையெனில் தேவைப்பட்டால் மீண்டும் எந்த நேரத்திலும் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்படும்.இந்திய ராணுவத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம். நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எப்போது வேண்டுமானாலும் அதிரடி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு ராணுவ தளபதி ராவத் பேசினார்.

Share this post:

Related Posts

Comments are closed.