‘புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்த்து போராடி வெற்றி பெற வேண்டும்’ கவுதமி பேச்சு!

201802041314007962_Gauthami-says-Fight-against-cancer-and-win_SECVPF 201802041314007962_1_gautami-3._L_styvpfநடிகை கவுதமி 15 வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதை எதிர்த்து போராடி சிகிச்சை பெற்று முழுமையாக குணம் அடைந்தார். அதன் பிறகு ‘லைப் வின்னர்’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
புற்றுநோய் விழிப்புணர்வின் ஒரு பகுதியாக இன்று பெசன்ட்நகர் கடற்கரையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நடைபயணம் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நடிகை கவுதமி பங்கேற்றார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

‘‘புற்றுநோய் வந்தால் இறப்புதான் என்று நினைத்து வீட்டிலேயே முடங்கி விடக்கூடாது. ஆரம்பத்திலேயே புற்று நோயை கண்டறிந்து அதை தொடர்ந்து போராடி சிகிச்சை பெற்று குணமடையலாம். 15 வருடங்களுக்கு முன்பு எனக்கு புற்றுநோய் ஏற்பட்டது. அப்போது அதை எதிர்த்து போராடி சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து உங்கள் முன்பு நின்று கொண்டிருக்கிறேன்.
புற்று நோயில் இருந்து முழுமையாக குணமடைய முடியும் என்பதற்கு நானே சாட்சி. 20 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய் வந்து குணமடைந்து வரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். எனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அதை எதிர்த்து போராடி குணமடைய வேண்டும்.
புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழ்க்கையில் மனம் தளர்ந்து விடக்கூடாது. புற்றுநோய்க்கு சிகிச்சை பெற அரசு ஆஸ்பத்திரிகளிலும் வசதி உள்ளது. ஆனால் அரசாங்கம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Share this post:

Related Posts

Comments are closed.