அதர்வா கதாநாயகனாக நடிக்கும் ‘பூமராங்’ படம் டிசம்பர் 28ஆம் தேதி வெளியீடு!

d12a54c0-8a4f-4ffc-bc80-cbd2d9907f75 IMG_6257இயக்குனர் கண்ணன் மற்றும் அவரது ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் ‘பூமராங்’ படம் டிசம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்ற அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்துதல் தான் மொத்த குழுவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இயக்குனர் கண்ணன் கூறுகையில், “டிசம்பர் 28ஆம் தேதி பூமராங் படம் வெளியாக இருப்பதால் ஒட்டு மொத்த குழுவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். கடந்த ஒரு ஆண்டாகவே குழுவில் அனைவருக்கும் சவாலாக இருந்தது,  குறிப்பாக இந்த படத்தில் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்க மிகவும் துல்லியமான முயற்சிகள் எடுத்த அதர்வா முரளிக்கு. இந்த படம் மிகச்சிறப்பாக உருவாக எனக்கு மொத்த குழுவும் பக்க பலமாக இருந்தது ஒரு திரைப்பட தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் முடிவில்லாத கடின உழைப்புக்கு இது புத்தாண்டு பரிசாக இருக்கும் என்று நான் உறுதியாக இருக்கிறேன். மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜா ஆகியோரின் உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும்” என்றார்.

மேலும், நடிகர்களை பற்றி அவர் கூறும்போது, “சிறந்த காட்சிகளை வழங்குவதில் உபென் படேல் சமரசமே செய்ய விரும்பவில்லை. வேறு ஒருவர் அவருக்கு டப்பிங் பேசினாலும், தமிழ் கற்றுக் கொள்ள அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். படப்பிடிப்பின் போது அவரது குறைபாடற்ற பங்களிப்பை வழங்குவதற்கும் ஆர்வமாக இருந்தார். சுஹாசினி மணிரத்னம் மேடம் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தில், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சதீஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகிய இருவருக்குமே சமமான முக்கியத்துவம் இருக்கும். வெறும் காமெடி மட்டுமல்லாமல், கதையில் முக்கிய பங்காகவும் இருப்பார்கள்.

‘அர்ஜுன் ரெட்டி’ மூலம் புகழ் பெற்ற ரதன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குனர் கண்ணன் தனது மசாலா பிக்ஸ் மூலம் படத்தை தயாரித்திருக்கிறார்.

 

Share this post:

Related Posts

Comments are closed.