‘தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா’ – இயக்குனர் ஆர் கண்ணன்!

201807271828431481_R-Kannan-says-indhuja-has-made-my-work-easier_SECVPF 201807271828431481_1_Boomerang-11._L_styvpfகண்ணன் ஒரு இயக்குனராக, ஒரு சிறந்த கலையுணர்வுடன் மட்டுமே திருப்தியடைய மாட்டார். சரியான கதாபாத்திர தேர்வாலும் மனநிறைவு அடைபவர். அவரது ஒவ்வொரு திரைப்படமும், எந்த வகை படமாக இருந்தாலும், நடிகர்களின் கதாபாத்திர தன்மை மற்றும் சரியான நடிகர் தேர்வு ஆகியவை ஒரு சுவாரஸ்யமான கவர்ச்சியாக மாறும். அவரது அடுத்த படமான ‘பூமராங்’ ஒரு விதிவிலக்கு அல்ல. இயற்கையாகவே, அந்த  படத்தின் நடிகர்களின் பட்டியல் ஒரு உதாரணமாக அமைகிறது. அதர்வா முரளி மற்றும் மேகா ஆகாஷ் போன்ற திறமையான நடிகர்களுடன், இந்துஜா சேரும்போது, அது மிக  பிரம்மாண்டமாக மாறுகிறது.

இந்துஜாவின் திறமையை பற்றி கூற ‘திறமை’ என்ற வார்த்தை மிக சாதாரண வார்த்தையாக இருக்கலாம். ஒவ்வொரு காட்சியிலும் தன் தன்னிச்சையான நடிப்பின் மூலம் எனது வேலையை எளிதாக்கினார் இந்துஜா. அவரது கதாபாத்திரத்தின் மிக உயர்ந்த தரத்தை உணர்ந்து, மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்” என்கிறார் இயக்குனர் கண்ணன். அவரது கதாபாத்திரம் குறித்து மேலும் கூறும்போது, “அதர்வா முரளி மற்றும் மேகா ஆகாஷ் கதாபாத்திரங்கள் ‘பூமராங்’ ஸ்கிரிப்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஸ்கிரிப்ட் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் போது, மிகச்சிறப்பான நடிப்பை வழங்கும் இன்னும் ஒரு திறமையான கலைஞரைக் கோருகிறது. இந்துஜா நடித்த இரண்டு படங்களில் அவரது நடிப்பை பார்த்தவுடன், இந்த  கதாபாத்திரத்துக்கு அவர்  உடனடி தேர்வாக அமைந்தார்” என்றார்.

ஆக்‌ஷன் – த்ரில்லர் படமான ‘பூமராங்’ போஸ்ட் புரொடக்சன் பணிகளின் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளோம். இசை,  டிரெய்லர் மற்றும் உலக அளவில் வெளியிடும் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

 

 

 

Share this post:

Related Posts

Comments are closed.