அட்லீ இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்!

201811091346273931_Kadambur-Raju-says-Sarkar-problem-ended_SECVPF 10592jpgஅட்லீ இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நவம்பர் 14-ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. அட்லீ இயக்கவுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் அட்லீ. இதன் படப்பிடிப்பு 2019 ஜனவரியில் தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. இப்போதைக்கு ‘தளபதி 63’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் விவேக், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். நாயகியாக பல்வேறு முன்னணி நாயகிகளின் பெயர்கள் வெளியாகிக் கொண்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து நயன்தாரா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. விஜய்-நயன்தாரா இருவருமே இணைந்து ஏற்கனெவே ‘வில்லு’ படத்தில் நடித்திருக்கிறார்கள். ‘சிவகாசி’ படத்தில் விஜய்யுடன் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார் நயன்தாரா. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஜய் – நயன்தாரா இணையும் 3-வது படமாக ‘தளபதி 63’ அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் முழுக்க விளையாட்டை மையப்படுத்தியே அமைத்திருக்கிறார் இயக்குநர் அட்லீ. இதில் விளையாட்டுப் பயிற்சியாளராக விஜய் நடிக்கவுள்ளார். இதுவரை விஜய் நடித்திராத கதாபாத்திரம் என்பதால், இதற்காக சில பயிற்சிகளையும் மேற்கொள்ளவுள்ளார் விஜய். விளையாட்டை மையப்படுத்தியது என்றாலும், விஜய் ரசிகர்களுக்கு ஏற்றவகையில் ஜனரஞ்சகமாக திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் அட்லீ.

இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, சண்டை வடிவமைப்பாளராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக், எடிட்டராக ரூபன், கலை இயக்குநராக முத்துராஜ் ஆகியோரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

Share this post:

Related Posts

Comments are closed.