ஏழைகளுக்கு தளபதி விஜய் ரசிகர்கள் செய்த நலத்திட்ட உதவிகள்!

WhatsApp Image 2018-03-03 at 12.28.33 PMWhatsApp Image 2018-03-03 at 12.28.28 PM (1)தென்னிந்திய சினிமாவில் தளபதி விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் சமுதாயத்தில் மிக எளிமையுடன் மேலோங்கி இருப்பவர் மட்டும் சமூகமும்  மேலோங்க வேண்டும் என நினைப்பவர். விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் தளபதி ரசிகர்கள் எண்ணிலடங்கா நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். அதேபோல் இன்று மதுரை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாண்டியன் கிழக்கு  ஒன்றியம் சூர்யா அவர்கள் சார்பாக ஏற்பாடு செய்த  நலத்திட்டஉதவிகள் :  100 வேஷ்டிகள் மற்றும் 100 சேலைகள், 40 சில்வர் பாத்திரங்கள், 50 சில்வர் குடங்கள்,10 மண்வெட்டிகள்,1 கன்றுக்குட்டி .. இவை அனைத்தையும் மதுரை மேலூரில்  உள்ள  ஒத்தகடை  பகுதியில் மதுரை வடக்கு  மாவட்ட இளைஞரணி மற்றும் மேலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் குஷிகுமார் சார்பாக அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் திரு.புஸ்ஸி .N .ஆனந்த் (EX .MLA )  அவர்கள் வழங்கினார்..இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி  தலைவர் விஜய் அன்பன் ,கல்லானை தெற்கு மாவட்ட   தலைவர் தங்கபாண்டி மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

 

Share this post:

Related Posts

Comments are closed.