மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியின் சின்னத்தை விட்டுக் கொடுத்த தமிழர் பாசறை..!

IMG_9813மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியின் சின்னத்தை மும்பை தமிழர் பாசறை விட்டுக்கொடுத்துள்ளதாக து என்று மும்பை செல்லும் வழியில் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று அவர் தனது கட்சிக்கு பெயர் வைத்து இருக்கிறார். வெள்ளை நிறம் கொண்ட அவரது கட்சியின் கொடியில், ஒன்றுடன் ஒன்று இணைந்த 6 கைகளுக்கு மத்தியில் நட்சத்திரம் இருப்பது போன்ற உருவம் இடம்பெற்று உள்ளது. மேலும் கட்சியின் பெயரும் கொடியில் இடம்பெற்று இருக்கிறது.கமல்ஹாசன் கொடியில் உள்ள கைகள் இணைந்த உருவம், ஏற்கனவே உள்ள சில அமைப்புகளின் இலச்சினை (‘லோகோ’) போன்று இருப்பதாக கருத்துகள் வெளியாகின.

IMG_9802 (1)இந்நிலையில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவரான நடிகர் கமல்ஹாசன் சென்னையில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். அப்போது அவர் கூறியதாவது:

மும்பையில் இருந்து தமிழர் பாசறையை சேர்ந்தவர்கள் வந்திருக்கிறார்கள். எங்களது கட்சிக் கொடியில் உள்ள சின்னத்தில் தங்கள் அமைப்பு சின்னத்தின் சாயல் இருப்பதாக தெரிவித்தனர். என் மீதான அன்பின் காரணமாக அந்த சின்னத்தின் உரிமையை எங்களுக்கு தந்துள்ளனர். விமர்சனங்கள், பிரச்சினைகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களே இந்த பிரச்சினையை தீர்த்துவைத்து உள்ளனர். எனவே, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னத்தையும், பெயரையும் மாற்றியமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.

இது தொடர்பாக மும்பை தமிழர் பாசறை நிர்வாகி ராஜேந்திரசாமி கூறுகையில், ‘எங்களின் கட்சியின் கொடியில் உள்ள சின்னமும் கமல்ஹாசன் பயன்படுத்திய கொடியின் சின்னமும் ஒரே மாதிரியாக இருந்தது. கமல்ஹாசன் ஒரு ஜனநாயக கோவில் கட்ட எங்களின் சின்னத்தை பயன்படுத்த இருக்கிறார் என மகிழ்ச்சி அடைந்தோம். அதனால் இந்த சின்னத்தை பயன்படுத்த புரிந்துணர்வு அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளோம்’ என்றார்.

 

Share this post:

Related Posts

Comments are closed.