சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இரண்டு படங்களில் கதாநாயகனாக நடிக்கும் தனுஷ் !

201901021043031234_Sathya-Jyothi-Films-to-Produce-Dhanushs-next-2-films_SECVPF 7H7A0139பெருமைக்குரிய சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரும் பெருமை தரும் அஜித்குமார் மற்றும் நயன்தாரா நடித்துள்ள ‘விஸ்வாஸம்’ வரும் ஜனவரி 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் பெருமகிழ்ச்சியான புத்தாண்டு தினத்தன்று, தேசிய விருது பெற்ற நடிகர்-தயாரிப்பாளர் தனுஷ் அவர்கள் தமிழ் சினிமாவை கலக்கிய இரண்டு இயக்குனர்களுடன் இணையும் இரண்டு படங்களின் அறிவிப்பை மிகுந்த உற்சாகத்துடன் வெளியிட்டிருக்கிறது  தயாரிப்பு நிறுவனம்.

எப்போதும் சொல்லை விட செயல்களை நம்பும் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கூறும்போது, “‘சத்யஜோதி பிலிம்ஸ்” நிறுவனத்துக்கு இந்த வருடம் மிக முக்கியமான படம். ‘விஸ்வாஸம்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லருக்கான பெரும் வரவேற்பு இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையை தந்திருக்கிறது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் சத்யஜோதி ஃபிலிம்ஸ், 2019 ஆம் ஆண்டில் தரமான பொழுதுபோக்கு அம்சங்களை தயாரிப்பதற்கு தயாராக உள்ளது. மேலும், அதில் முதல் இரண்டு படங்களை இன்று அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மிகவும் கொண்டாடப்படும் நடிகர் தனுஷ், இயக்குனர்கள் துரை செந்தில்குமார் மற்றும் ராம்குமார் ஆகிய இரு திறமை வாய்ந்த இயக்குனர்களுடன் இணைந்து பணிபுரிவது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது” என்றார்.

தனுஷ் 34 படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்க, விவேக் மெர்வின் இரட்டையர்கள் இசையமைக்கிறார்கள். தனுஷ் 35 படத்தை ராட்சசன் புகழ் ராம்குமார் இயக்குகிறார்.

தனுஷ் எப்போதுமே தமிழ் சினிமாவின் பெருமை தான். ஒரு ‘நடிகர்’ மற்றும் ‘ஸ்டார்’ என ஒரு வலுவான இடத்தை வைத்திருப்பது தான் அவருடைய தனித்துவமான அம்சம். இதுவே அவர் எந்த கமெர்சியல், யதார்த்த படம் என எந்த வகை படம் நடித்தாலும் தயாரிப்பாளருக்கு நல்ல லாபமாகவே அமைகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் எப்போதுமே நல்ல திறமையான கலைஞர்களுடன் பணிபுரிவதில் மகிழ்ச்சியடைகிறது. குறிப்பாக, துரை செந்தில்குமார் மற்றும் ராம்குமார் ஆகியோர் புதுமையான கதைகளை, தனித்துவமான கதை சொல்லல் மூலம் சிறப்பான படங்களாக தருவது சிறப்பம்சம். இந்த மாதிரி திறமையான கலைஞர்களுடன் பணி புரிவது ஒரு தயாரிப்பாளராக, சத்யஜோதி பிலிம்ஸ்க்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார் சத்யஜோதி ஃபிலிம்ஸ் டிஜி தியாகராஜன்.

இந்த இரண்டு படங்களின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

 

 

Share this post:

Related Posts

Comments are closed.