ராஜ்நாத்சிங்குடன் மெகபூபா முப்தி சந்திப்பு : காஷ்மீர் நிலவரம் குறித்து ஆலோசனை!

201707151305348888_Mehbooba-meets-Rajnath-to-discuss-Kashmir-situation_SECVPFமத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, ஜம்மு காஷ்மீர் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்தும், அமர்நாத் யாத்ரீகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ஆலோசனையின் போது, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அமைதியை நிலைநாட்ட மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ராஜ்நாத்சிங்கிடம் மெகபூபா முப்தி எடுத்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post:

Related Posts

Comments are closed.