ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் ரயிலில்வெடி விபத்தில் 10 பேர் பலியாகினர். 50 பேர் காயம் அடைந்தனர்.

201704031911100866_St-Petersburg-Metro-Blast-At-Least-10-Killed-In-Explosions_SECVPFரஷ்யாவில் பீட்டர்ஸ்பர்க் நகர மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் உள்ள ரயிலில்  வெடி பொருள் வெடித்ததில் 10 பேர் பலியாயினர். 50 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வெடி விபத்து ரயிலுக்குள் நடந்ததாகவும், இது சக்தி வாய்ந்த வெடிகுண்டா? அல்லது பயங்கரவாத தாக்குதலா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் வெளியான படங்களில் மெட்ரோ ரயிலின் கதவுகள் வெடித்துச்சிதறிய காட்சிகள் தெரிகின்றன.
வெடி விபத்தை தொடர்ந்து பீட்டர்ஸ்பர்க் சுரங்கப்பாதையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. மெட்ரோ ரயிலின் இரண்டு கேரேஜ்களில்  வெடி விபத்து நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஒரே ரயிலின் இரண்டு கேரஜ்களா அல்லது வேறு வேறு ரயில்களிலா என்ற விவரம் தெரியவில்லை. பயங்கரவாத செயல் உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share this post:

Related Posts

Comments are closed.