முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மேலும் ஒரு டாக்டர் பட்டம்!

201803041449468473_Pranab-Mukherjee-conferred-Honorary-DLitt-by-IIEST_SECVPFமேற்கு வங்காளம் மாநிலம், ஹவுரா மாவட்டம், ஷிப்பூர் பகுதியில் உள்ள இந்திய பொறியல், அறிவியல், தொழில்நுட்ப பயிலகத்தின் நான்காவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பத்து பாடத்திட்டங்களின்கீழ் பயின்ற 799 மாணவ-மாணவியர்களுக்கு பட்டங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

மேலும், ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்த 83 பேருக்கு டாக்டர் (முனைவர்) பட்டங்களும் அளிக்கப்பட்டன. இவ்விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

சமூகம், பொருளாதாரம், மனித அறிவியல் மற்றும் கலைகளுக்காக பிரணாப் முகர்ஜி ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இந்த பட்டம் அளிக்கப்படுவதாக அவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விழாவில் ஏற்புரையாற்றிய பிரணாப் முகர்ஜி, ’இந்த கல்வி நிறுவனத்தின் இதற்கு முன்னரும் தனக்கு டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்ததை நினைவு கூர்ந்தார். ஆனால், அப்போது ஜனாதிபதியாக பதவி வகித்ததால் அரசியலமைப்பு சட்டம் சார்ந்த காரணங்களால் நான் மறுத்து விட்டேன்.

தற்போது ஓய்வு பெற்ற பின்னர் இந்த பட்டத்தை ஏற்று கொள்வதில் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று குறிப்பிட்டார்.

Share this post:

Related Posts

Comments are closed.