மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் கோபாலபுரத்தில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின் தற்போது பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்த அவரது உடல் ராஜாஜி அரங்கிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 ம8-karunanthi deathணிக்கு காலமானார். இவரது இறப்புக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கருணாநிதியின் உடல் நேற்று இரவு காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லம் மற்றும் சிஐடி காலனி உள்ள கனிமொழி இல்லம் ஆகிய இடங்களில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.
இன்று அதிகாலை 4 மணியளவில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்த ராஜாஜி அரங்கில் அவரது உடல் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொண்டர்கள் அதிகளவில் குவிந்ததால் சற்று தாமதம் ஏற்பட்டு தற்போது கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கிற்கு கொண்டு வரப்பட்டது.

Share this post:

Related Posts

Comments are closed.