புதுடெல்லியில் இருந்து நேபாள நாட்டிற்கு நேரடி பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது..!

201710161958501436_Bus-service-between-Nepals-Rolpa-and-New-Delhi-begins_SECVPFபுதுடெல்லி,
புதுடெல்லி-நேபாளம் இடையே வாரந்திர நேரடி பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. நேபாளம் காத்மாண்டுவில்  இருந்து சுமார் 280 கிமீ மேற்கே உள்ள ரோப்லா மாவட்டத்தில் லிவாங் நகரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு பியுத்தான், பாலுவாங், நேபாள் கஞ்ச் வழியாக டெல்லி வந்து சேரும். மறுபடியும் வெள்ளிகிழமை டெல்லியில் இருந்து புறப்பட்டு ரோப்லாவுக்கு சென்று அடையும்.
புதுடெல்லி-நேபாளம் இடையே பஸ் போக்குவரத்து சேவையை ரோப்லா மாவட்டத்தை சேர்ந்த போக்குவரத்து நிறுவனம் இந்த சேவையை தொடங்கி உள்ளது. முதன் முறையாக தொடங்கப்பட்ட இந்த போக்குவரத்து சேவைக்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையே தொடங்கப்பட்ட பஸ் போக்குவரத்து பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Share this post:

Related Posts

Comments are closed.