பிரதமர் மோடியுடன் உஸ்பெகிஸ்தான் அதிபர் சந்திப்பு பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின!

201810011526293835_Delhi-PM-Modi-and-Uzbek-President-witness-exchange-of-MoUs_SECVPF 201810011526293835_1_mo098._L_styvpfஇந்திய தலைநகர் டெல்லியில், உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபர் ஷவ்காட் மிர்ஜியோயேவ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையேயான அரசு ரீதியான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் இருநாடுகளின் உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது

அதையடுத்து, பிரதமர் மோடி மற்றும் உஸ்பெகிஸ்தான் அதிபர் முன்னிலையில், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்களை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அந்நாட்டு அதிகாரிக்கு அளித்தார்.

இதையடுத்து, பேசிய பிரதமர் மோடி, சிறப்பு வாய்ந்த நண்பர் என உஸ்பெகிஸ்தான் அதிபரை குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பில் நடைபெற்ற ஆலோசனை இருநாடுகளின் உறவுக்கு நல்வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியை தொடர்ந்து பேசிய உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்காட், பழமையான வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் கொண்ட இந்திய மக்களை தாம் மதிப்பதாக கூறியுள்ளார்.

Share this post:

Related Posts

Comments are closed.