‘தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்’ தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சொல்கிறார்!

201803041546360892_Thirunavukkarasar-says-TamilNadu-rule-Chang-action-should_SECVPFதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் பெரவள்ளூர் சதுக்கத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட வேண்டும். இதுபோல் மத்தியிலும் ஆட்சி மாற்றம் வரவேண்டும். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வேண்டுமே என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. தமிழ்நாட்டின் தலைவிதி மாற்றி எழுதபட வேண்டுமானால் ஆட்சி மாற்றம் என்பது அவசியமாக உள்ளது.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நல்லது செய்து இருக்கிறார். கெட்டதும் செய்து இருக்கிறார். ஆனாலும் அவர் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கு அச்சுறுத்தலாகவே இருந்தார். ஆனால் இப்போது அந்த நிலைமை இல்லை. தெலுங்கு தேச எம்.பி.க்கள் ராஜினாமா மிரட்டல் விடுக்கிறார்கள். அதுமாதிரியான நிலைமை தமிழகத்தில் இல்லை.

தெலுங்கு தேச எம்.பி.க்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கூண்டோடு ராஜினாமா செய்வோம் என்று மத்திய அரசுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். அதுபோல தமிழகத்திலும் செய்யலாம். ஆனால் அப்படி மிரட்ட தயங்குகிறார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் தமிழக நலன் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஆயிரம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டணி கட்சி தலைவர்கள் முத்தரசன், கீ.விர மணி, காதர் மொய்தீன் ஆகியோரும் பேசினார்கள். மகேஷ்குமார் தலைமை தாங்கினார் .  பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. பா.ரங்கநாதன், தாயகம் கவி, நாகராஜ் ஐ.சி.எப். முரளி, சந்துரு, தேவ ஜெகன், அதிபதி பாபு, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this post:

Related Posts

Comments are closed.