ஜம்மு காஷ்மீரில் டிரால் பகுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

201707151046574664_2-terrorists-killed-in-encounter-in-Kashmirs-Tral-Police_SECVPFதெற்கு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததும், அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே சிறிது நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சண்டைக்கு பிறகு இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இருப்பினும் அங்கு தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நீடித்து வருகிறது.

Share this post:

Related Posts

Comments are closed.