ஜப்பான் பிரதமருடன் சுஷ்மா சுவராஜ் ஆலோசனை!

201803301545013312_Sushma-Swaraj-calls-on-Japanese-PM-Shinzo-Abe_SECVPFஇந்தியாவின் உள்கட்டமைப்பு, உற்பத்தி, நிதிச்சந்தை ஆகிய துறைகளில் ஜப்பான் அரசு ஏராளமாக முதலீடு செய்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஜப்பான் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான பல்வேறு துறை தொடர்புகளை மேலும் வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

பின்னர், கடந்த 2017-ம் ஆண்டு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்தியா வந்திருந்தபோது இந்த உறவுகள் மேலும் பலம் அடைந்தது.
இந்நிலையில், இந்தியா – ஜப்பான் இடையிலான ஒன்பதாவது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க வருமாறு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு ஜப்பான் வெளியுறவுத்துறை மந்திரி டாரா கோனோ அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்று மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக கடந்த 28-ம் தேதி சுஷ்மா சுவராஜ் டெல்லியில் இருந்து டோக்கியோ சென்றார். இன்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வை  சந்தித்த சுஷ்மா சுவராஜ், பிரதமர் மோடியின் வாழ்த்து செய்தியை அவருக்கு பரிமாறியதுடன் இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் தொடர்பாகவும், தெற்காசியா மற்றும் சர்வதேச அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். ஜப்பான் – இந்தியா இடையிலான பாரம்பரியமிக்க நட்புறவு வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட இதயப்பூர்வமான உறவாகும் என இந்த சந்திப்புக்கு பின்னர் ஷின்சோ அபே குறிப்பிட்டார்.

Share this post:

Related Posts

Comments are closed.