காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதி: டாக்டர்கள் தீவிர சிகிச்சை

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதி:
டாக்டர்கள் தீவிர சிகிச்சை

27-karu1
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தனர். அதன் பின்னர் அவருக்கு அவரது வீட்டிலேயே மருத்துவர்கள் அவரது உடல்நிலையை 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் திடீர் ரத்த அழுத்த குறைவால், திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அதன் பின், திமுக தலைவர் கருணாநிதிக்கு, ரத்த அழுத்தம் சீரானதாகவும், அதற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், திமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தற்போது காவேரி மருத்துவமனை அருகிலும், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீடு அருகிலும் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர். அவரை ஒருமுறை நேரில் பார்க்க வேண்டும் என்று பல தொண்டர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் காவல்துறையினர் அலர்ட் ஆக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Share this post:

Related Posts

Comments are closed.