கருணாநிதியை நேரில் பார்த்த துணை ஜனாதிபதி: சிகிச்சை புகைப்படம் வெளியீடு

கருணாநிதியை நேரில் பார்த்த துணை ஜனாதிபதி: சிகிச்சை புகைப்படம் வெளியீடு

29-karu
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை துணை ஜனாதிபதி நேரில் பார்த்து நலம் விசாரித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த இரண்டு நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் கோபாலபுர இல்லத்தில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனிடையே அரசியல் தலைவர்கள் பலரும் கோபாலபுர இல்லத்தில் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். நோய் தொற்று ஏற்படும் என்பதற்காக யாரும் நேரில் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி உடல்நலை சீராகி வருகிறது விரைவில் நலம் பெறுவார் என்று கூறி வந்தார்.

இந்நிலையில் இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயூடு திமுக தலைவர் கருணாநிதியை மருத்துவமனையில் நேரில் பார்த்து நலம் விசாரித்தார். கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படம் தற்பொது வெளியிடப்பட்டுள்ளது.

Share this post:

Related Posts

Comments are closed.