ஓ.பி.எஸ்.சின் நிர்ப்பந்தத்தால் நாங்கள் சசிகலா குடும்பத்தை அ.தி. மு.க.வில் இருந்து விலக்கி வைக்கவில்லை..அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு!

201704201120028679_OPS-compulsions-Sasikala-family-Did-not-turn-away-Minister_SECVPFமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூடி விவாதித்து அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா குடும்பத்தை விலக்கி வைப்பது என்று முடிவு செய்தனர்.
இதையடுத்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன் னீர்செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “சசிகலா குடும் பத்தை அ.தி.மு.க.வில் இருந்து விலக்கி வைப்பதாக எடப்பாடி பழனிசாமி அணியினர் கூறியிருப்பது எங்களின் தர்மயுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி” என்றார்.

இதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று கூறியதாவது-எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் கூடி பேசி சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க.வில் இருந்து விலக்கி வைப்பதாக முடிவு எடுத்துள்ளோம். இதற்கு பதில் அளித்த ஓ.பி.எஸ். தர்மயுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி என்கிறார். ஓ.பி.எஸ்.சின் நிர்ப்பந்தத்தால் நாங்கள் சசிகலா குடும்பத்தை அ.தி. மு.க.வில் இருந்து விலக்கி வைக்கவில்லை. 1.5 கோடி அ.தி.மு.க. தொண் டர்களின் விருப்பத்தின் பேரில் கட்சியின் நலன் கருதி சசிகலா குடும்பத்தை அ.தி.முக.க.வில் இருந்து விலக்கி வைத்துள்ளோம். அமெரிக்காவில் டிரம்ப் வெற்றி பெற்றதும் என்னால்தான் என்றும் பன்னீர் செல்வம் கூறுவார்… இவ்வாறு அவர் கூறினார்.

Share this post:

Related Posts

Comments are closed.