ஓமன் நாட்டின் துணை பிரதமரை சந்தித்தார் மோடி

201802112012156588_PM-Modi-met-Oman-Deputy-Prime-Minister-Sayyid-Fahad-bin_SECVPFமத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் சென்றுள்ள மோடி இன்று ஓமன் நாட்டின் துணைபிரதமர் சய்யித் ஃபஹத் பின் மஹ்மூத் அல்-சைத்தை சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக பாலஸ்தீனம், யு.ஏ.இ., ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் கடைசி நாளான இன்று ஐக்கிய அரசு அமீரகம் சென்றார். அபுதாபி சென்றடைந்த பிரதமர் மோடியை பட்டத்து இளவரசர் முகமது பின் ஜையத் அல் நெஹயான் வரவேற்றார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் அங்கு நடைபெற்ற ஆறாவது உலக அரசு உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதன்பின்னர், மோடியும், ஓமன் துணைபிரதமர் இரு நாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின் மஸ்கட்டில் உள்ள கிராண்ட் ஹையாத் ஓட்டலுக்கு வெளியே கூடியிருந்த இந்தியர்களை மோடி சந்தித்து பேசினார். அதன்பின் பிரதமர் மோடி தனது பயணத்தை முடித்துகொண்டு இன்று இரவு ஓமனில் இருந்து புறப்பட்டு மீண்டும் இந்தியா வருகிறார்.

Share this post:

Related Posts

Comments are closed.