‘என்மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

201805031853109019_Rahul-hits-back-at-Modi-for-personal-attacks-on-him_SECVPFகர்நாடக சட்டசபை தேர்தல் மே 12-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், பிதார் மாவட்டத்தில் உள்ள அவுரட் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி இன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
நீரவ் மோடி 30,000 கோடி ரூபாயை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன்? ரபேல் விமானம் ஒன்றின் விலை 700 கோடி மட்டுமே. ஆனால் நீங்கள் கொடுத்துள்ள ஒப்பந்தத்தில் ஒரு விமானம் 1500 கோடி என வாங்கப்படுகிறதே ஏன் என கேள்வி எழுப்பினார்.
இதேபோல், கர்நாடக தேர்தலில் கபார் சிங் கும்பலான ரெட்டி சகோதரர்களை கட்டவிழ்த்துவிட மோடி திட்டமிட்டுள்ளார்.  நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லாததால் பிரதமர் மோடி என் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துகிறார். ஆனால், நான் தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட மாட்டேன். இதுதான் அவருக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். கடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமாகவே நிறைவேற்றி உள்ளோம் என்றார்.

Share this post:

Related Posts

Comments are closed.