இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தீவிரவாத தாக்குதல்: 8 பேர் கைது!

lon_3146930fஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 5 பேர் கொல்லப் பட்டுள்ளனர். பலர் காயம் அடைந் துள்ளனர். இதுதொடர்பாக 8 பேரை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இங்கிலாந்தில் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்ற போது பிரதமர் தெரசா மே மற்றும் 400 எம்.பி.க்கள் பங் கேற்றனர். அப்போது நாடாளு மன்றத்துக்கு அருகில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தில் காரில் வேகமாக வந்த மர்ம நபர் அந்தப் பகுதியில் சென்று கொண் டிருந்த பொதுமக்கள் மீது மோதி யுள்ளார். பின்னர் அந்த மர்ம நபர் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு ஓடிச் சென்று அங்கிருந்த பாதுகாவலர் ஒருவரை கத்தியால் குத்தினார்.

இதில் பாதுகாவலர் பி.சி.கீத் பால்மர் என்பவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். உடனடியாக பாதுகாவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி மர்ம நபரைச் சுட்டுக் கொன்றனர். மர்ம நபர் தாக்கியதில் மேலும் 3 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தால் உடனடியாக நாடாளுமன்றத்தில் இருந்து பிரதமர் தெரசா மே, எம்.பி.க்கள் அனைவரும் பாதுகாப்பான இடங் களுக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். அத்துடன் நாடாளு மன்றமும் மூடப்பட்டது. அதன்பின் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இது குறித்து ஸ்காட்லாந்து யார்டு துணை ஆணையரும் (பொறுப்பு) தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவருமான மார்க் ரோவ்லே நேற்று கூறியதாவது: விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால், தாக்குதல் நடத்தியவர் களைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று வெளியிடாவிட்டாலும், இது தீவிரவாத தாக்குதல்தான். தாக்குதல் நடத்தியவர்களின் நோக்கம் என்ன, அதற்காக என்ன சதி திட்டங்களைத் தீட்டியுள்ளனர், அவர்களுடைய கூட்டாளிகள் யார் போன்ற விவரங்களை அறிய வேண்டி உள்ளது. எனினும், சர்வ தேச தீவிரவாதத்தால் உந்தப்பட்டு தனி நபரே தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக் கிறோம். இவ்வாறு மார்க் ரோவ்லே கூறினார். தாக்குதலில் 40 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 7 பேரின் உடல்நிலைக் கவலைக்கிட மாக உள்ளது. இந்தத் தாக்குதலை அடுத்து நியூ ஸ்காட்லாந்து யார்டு வளாகத்தில் இங்கிலாந்து கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப் பட்டது.

பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே நாடாளுமன்றத்தில் நேற்று கூறியதாவது: காரில் வேகமாக சென்று பொதுமக்களைக் கொலை செய்த தீவிரவாதி பிரிட்டனில் பிறந்தவர். சந்தேகத்தின்பேரில் பிரிட்டனின் எம்15 உளவுப் பிரிவு அதிகாரிகள், அந்த நபரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளனர். தாக்குதலில் உயிரிழந்த பாதுகாவலர் கீத் ஒரு ஹீரோ. அவருக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். தீவிரவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அதற்கு அஞ்ச மாட்டோம் என்ற துணிவை வெளிப்படுத்தும் வகையிலும் வழக்கம்போல் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தாக்குதலை நடத்திய தீவிரவாதி காலித் மசூத் (52) என்று ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் நேற்று அறிவித்தனர். கென்ட் நகரில் பிறந்த அவர் வெஸ்ட் மிட்லேண்ட் பகுதியில் வசித்து வந்தார். இவர் மீது ஏற்கெனவே சில வழக்குகள் உள்ளன.

Share this post:

Related Posts

Comments are closed.