ஆர்.எஸ்.எஸ். விழாவில் பிரணாப் முகர்ஜியின் பேச்சுக்கு அத்வானி பாராட்டு..!

201806081626550708_Pranab-s-visit-to-RSS-his-speech-a-significant-event-in-our_SECVPF 201806081626550708_1_Pranabh._L_styvpfமத்தியப்பிரதேசம் மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் அந்த இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கான உபச்சார விழா நேற்று நடந்தது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்பப்பட்டபோதே சர்ச்சை வெடித்தது. அவர் இதில் பங்கேற்க கூடாது என காங்கிரஸ் தலைவர்கள் பலர் தங்களது அதிருப்தி தெரிவித்தனர்.
இதற்கிடையே, பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் நாக்பூர் வந்தடைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த குறிப்பேட்டில் “பாரத மாதாவின் சிறந்த மகனுக்கு அஞ்சலி செலுத்த இங்கே வந்துள்ளேன்” என எழுதி கையெழுத்திட்டார்.
அதன்பின், உபச்சார விழாவில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி பேசுகையில், தேசியவாதமும், தேசபக்தியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. நாட்டின் பன்முகத்தன்மையை நாம் கொண்டாட வேண்டும். ஒரு சிலரை தனிமைப்படுத்திவிட்டு நாம் பன்முகத்தன்மையை பார்க்கமுடியாது என குறிப்பிட்டார்.

 

இந்நிலையில், பிரணாப் முகர்ஜியின் கருத்தை இன்று ஆமோதித்த பா.ஜ.க. மூத்த தலைவர் லால் கிஷன் அத்வானி, ஆர்.எஸ்.எஸ். அழைப்பை ஏற்று இவ்விழாவில் கலந்துகொண்ட பிரணாப் முகர்ஜி, இதன் மூலம் இந்திய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் சித்தாந்த வேற்றுமைகளுக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண முடியும் என்பதை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நிரூபித்துள்ளதாகவும், பன்முக மதநம்பிக்கை கொண்ட நமது சமூகத்தின் வேற்றுமையில் ஒற்றுமையை காணும் நனது நாட்டின் ஒருமைப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் நிலைநாட்டியுள்ளதாகவும் அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

Share this post:

Related Posts

Comments are closed.