‘அமைச்சர்கள் கருத்து கூறும் போது சமூகத்தை அவமரியாதையாக பேசக்கூடாது’ தமிழிசை..!

201805131108300708_Tamilisai-Soundararajan-says-ministers-comment-society_SECVPFதமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடகாவில் பா. ஜனதா பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும். கர்நாடகாவில் காங்கிரஸ் செய்த தில்லுமுல்லு காரணமாக ராஜராஜேஸ்வரி தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் மக்களுக்கு பயன் தருபவை. மக்கள் விரும்பாவிட்டால் அந்த திட்டங்கள் நிறுத்தப்படும். கெய்ல் திட்டத்தில் 91 சதவீத வேலை முடிந்துள்ளது. 9 சதவீத வேலை மட்டுமே பாக்கி உள்ளது. இதனை உயர் நீதி மன்றம் நடை முறைப்படுத்த கூறியும் மக்கள் எதிர்ப்பதால் திட்டத்தை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், அரசியல் வாதிகள் கருத்துகள் கூறும்போது ஒரு தரப்பினரையோ, சமூகத்தையோ அவமரியாதையாக பேசக் கூடாது. எஸ்.வி.சேகர் மீது கட்சி ஓழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அது பற்றி கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.

போலீஸ்காரர் ஜெகதீஸ் துரை குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பு தொகையும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். தமிழக அரசு மணல் விவகாரத்தில் உறுதியான முடிவு எடுக்க வேண்டும். நம்பியாறு, வைகை, தாமிரபரணி ஆறுகளில் மணல் அள்ளுவதால் நிலத் தடி நீர் வெகுவாக குறைந்துள்ளது.

Share this post:

Related Posts

Comments are closed.